Translate

புதன், 2 மார்ச், 2016

இன்ப வாழ்விற்கு

மக்களே..
நம் வாழ்வில் துன்பங்கள் ஏன் வருகின்றன..?
நாம் அல்லது பிறர் செய்யும் நீதிக்குப் புறம்பான குற்றங்களால்தன் துன்பங்கள் வருகின்றன.
குற்றங்கள் ஏன் நடக்கின்றன..?
மக்களின் அடிபடை வழ்க்கை தேவைகள் முழுமையாக நிறைவேராதபோது குறுக்கு வழியில் அந்த தேவைகளை நிறைவேற்ற முயலும்போது அது குற்றமாகிறது.
அனைத்து தவறுகளும் பணத்திற்காகதான் செய்யப் படுகின்றன
ஏனென்றால் பெரும்பாலான வாழ்க்கைத்தேவைகள் பணத்தின் மூலமே நிறைவேருகிறது.
அப்படியென்றால் அனைவருக்கும் பணம் கிடைக்க என்ன செய்யவேண்டும்..?
அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த வேலை வேண்டும்..!
முடியுமா...?
முடியும் .
யாரால்...?
அரசாங்கத்தால்..!
அனைவருக்கும் அரசுவேலை சாத்தியமா..?
சாத்தியம்தான்..
எப்படி..?
அனைத்து சொத்துக்களையும் அரசுடமை ஆக்க வேண்டும்
உடனே இப்போதுள்ள பணக்காரர்கள் எதிற்பார்கள்,,,
காரணம்.. அவர்கள் பல வழிகளில் சேர்த்தபணம் பயனில்லாமல் அரசுடமையாக்கப்படும் என்பதால்.
ஆனால் இந்த எண்ணம் தேவையற்றது...
ஏனென்றால்..
எதிர்கால அவசர மருத்துவ தேவைக்காகவும், தன்னுடைய வாரிசுகள் துன்பமின்றி வாழவேண்டும் என்பதற்காகவும்தான் பணம் சேமித்து வைக்கப் படுகிறது.



வாழ்க்கை

தவறும் தண்டனையும்தான் வாழ்க்கை
எனவே தண்டனைகுறைந்து
மகிழ்ச்சி அதிகரிக்கவேண்டும் என்றால்

தவறு செய்யாதீர்கள்

திங்கள், 9 பிப்ரவரி, 2015

ஊழலை ஒழிக்க ஒரே வழி

ஊழலை ஒழிக்க ஒரே வழி

   கரன்சி நொட்டுக்களின் புழக்கத்தை தடை செய்ய வேண்டும்.

       அதற்குப் பதிலாக குடிமக்கள் அனைவருக்கும் வரவு செலவுக்காக, ஒவ்வொருவருக்கும் ஒரு ஏ.டி.எம் கார்டு போன்ற வரவு செலவு செயக்கூடிய ஒரு மின்னனு அட்டையை வழங்கி விடலாம்.

        வரவு செலவுகளை  பராமரிப்பதற்காக கரன்சி நோட்டுக்கள் வங்கிகளுக்கு இடையில் மட்டும் தான் பரிமாரிக்கொள்ளப் பட வேண்டும்.

  இதனால் ரகசியமாக நடக்கும் லஞ்சம் கமிசன் போன்ற ஊலல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.

    ஏனெனில் கார்டை பயன்படுத்தும் போது அனைத்து வரவு செலவுகளும் கணினி மூலம் நடை பெறும் என்பதால் யார் கார்டில் இருந்து யார் கார்டுக்கு எவ்வளவு பணம் பரிமாற்றப்பட்டுள்ளது என்பது கட்டாயமாக பதிவு செய்யப்பட்டுவிடும் எனவே சட்டவிரோத பண பரிமாற்றத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

எனவே அனைத்து வரவு செலவுகளும் கண்கானிக்கப் படும் ஆகையால் யாரும் சட்ட விரோதமாக பணம் பெற முயலமாட்டார்கள், ஆசைப்பட மாட்டார்கள்.

    இதில் அரசுக்கும் வரியேய்ப்பு என்ற மிகப்பெரிய பிரச்சனையும் தீர்க்கப் படும். ஏனெனில் அணைவரின் வரவு செலவுகளையும்  மிகதுல்லியமாக கண்காணிக்க முடியும். அவரவர்களின் வருமானதிற்கேற்ற வரியை அந்தந்த கார்டு அக்கௌன்டிளிருந்து நேரடியாக வசூலித்துக் கொள்ள முடியும்.

  இது சாத்தியமா..?
 
சாத்தியம் தான்...

     எப்படி...?

      இந்த அட்டையில் வரவு செலவை செய்வதற்கான பாஸ்வேர்டாக அவரவர்களின் கையின் ஐந்து விரல்களின் ரேகைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  இதனால் இந்த அட்டையை திருடி பயன் படுத்த முடியாது. இதனால் பிக்பாகெட் போன்ற திருட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

                  இதை எப்படி பொது மக்களிடம் கொண்டு செல்வது...?

    இதுவும் மிக எளிதுதான்

சிறிய கையடக்க வரவி செலவு கருவியை உருவாக்கி கொண்டால் போதும்

   ஏன்..?

நாம் அணைவரும் பயன்படுத்தும் கைபேசியில் கூட இதற்கான ஏற்பாட்டைச்செய்யலாம்.
 
   இதில் பாதுகாப்புக்காக நமது கை கருவியில் எப்பொழுதும் குறைந்த தொகையை வைத்துக் கொண்டு (நாம் தற்போது பாகெட் மனி பயன்படுத்துவது போல). அதிக அளவான பறிமாற்றத்திற்கு வங்கியை நாடலாம்.

  இதனால் யாறெனும் சமூக விரோதிகள் மிரட்டி ஒரு பெரிய தொகையை தன் கணக்குக்கு பறிமாற்ற செய்வதை தடுத்துக் கொள்ளலாம்.

  இவாறு அணைத்து நடவடிக்கைகளும் கணினியை நம்பியிருந்தால் திடீரென சமூகவிரோதிகள் அல்லது வெளினாட்டுக் காரர்கள் நமது நாட்டு வங்கி செயல் பாடுகளை இணையம் மூலம் முடக்கிவிட்டால் என்ன செய்வது...?

    அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள கணினி நிபுனர்களைப் பயன்படுத்தலாம்.
மேலும் பணம் கரன்சி கட்டுகளாக நமது வங்கிகளில் இருக்கும் என்பதால் இதைப் பற்றி கவலைப் பட தேவையில்லை.

  இவ்வளவு பயனுள்ள இந்த திட்டதை நமது அரசாங்கம் செயல்படுதினால் அடுத்த வருடமே நம் இந்தியா வல்லரசாகிவிடும்.

     சிந்தியுங்கள்...ஆதரவு தாருங்கள்.... வாய்ப்புளோர் செயல்படுத்த முனையுங்கள்... முன்செல்ல நான் தயார்...!   நன்றி.